விஜயின் பிறந்தநாளையொட்டி அவரது படத்தை தன் கைப்பட வரைந்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
விஜயின் 43வது பிறந்த நாளையொட்டி பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை பைரவா, மெர்சல் என அடுத்தடுத்து விஜயுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், விஜயின் ஜில்லா அறிமுக காட்சி ஸ்டில்லை பெயிண்டிங் செய்து அந்த ஓவியத்தை டிவிட்டரில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவர் டிவிட்டர் பதிவில் ‘ விஜய் பிறந்தநாளுக்கு எனது சிறிய வேலை’ என பதிவிட்டு இருக்கிறார். அந்த ஓவியத்தில் ‘என்றென்றும் உங்களது வெற்றிநடை தொடரட்டும்… கோடானகோடி ரசிகைகளில் ஒருத்தி..‘’ என அந்த ஓவியத்தில் எழுதி இருக்கிறார் அவர். இந்தப்பதிவு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.