சினிமா

கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம்?

கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம்?

webteam

நடிகையர் திலகம் எனப் பெயர் பெற்ற பழம் பெரும் நடிகை சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் தேர்வுசெய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து திரையுலகை கவர்ந்த பழம்பெரும் நடிகைகளில் ஒருவர் சாவித்திரி. நடிகையர் திலகம் என்ற புகழ் பெற்ற சாவித்திரி, நடிகை மட்டுமின்றி திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியவற்றில் முத்திரை பதித்தவர்.

1950 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சினிமாவில் பிரபலமாக வலம் வந்த நடிகை சாவித்ரியின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், ஏற்ற தாழ்வுகள் ஆகியவற்றை விவரிக்கும் விதமாக சாவித்ரி வாழ்க்கை வரலாற்று படம் உருவாக உள்ளது.

தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் இப்படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவா..? கீர்த்தி சுரேஷா..? என்ற போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் சாவித்ரி வாழ்க்கை பின்னணி படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.