சினிமா

பல்சர் சுனில் யாரென்றே தெரியாது: காவ்யா மாதவன்

பல்சர் சுனில் யாரென்றே தெரியாது: காவ்யா மாதவன்

webteam

நடிகை பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பல்சர் சுனில் யாரென்றே தெரியாது என நடிகை காவ்யா மாதவன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்‍கில், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது இரண்டாவது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனிடம் தற்போது விசாரணை நடத்தினர். அப்போது, இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள பல்சர் சுனி, தான் காவ்யா மாதவனுக்கும் கார் டிரைவராக வேலை பார்த்ததாகவும் நடிகை பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோ அடங்கிய மெமரி கார்டை காவ்யாவின் கடையில் கொடுத்ததாகவும் கூறியிருந்தார். இதுபற்றி காவ்யாவிடம் ஏடிஜிபி சந்தியா விசாரணை நடத்தினார். அதில், தனக்கு பல்சர் சுனில் யாரென்றே தெரியாது என்றும், தன்னிடம் அவர் கார் டிரைவராக வேலை பார்த்தது இல்லை என்றும் காவ்யா கூறியுள்ளார். இத்தகவல்கள் இப்போது வெளியே கசிந்துள்ளது.
இதற்கிடையே இந்த வழக்கில் காவ்யா மாதவனிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.