சினிமா

காமெடி நடிகர் கருணாகரனை வறுத்தெடுக்கும் விஜய் ரசிகர்கள்

காமெடி நடிகர் கருணாகரனை வறுத்தெடுக்கும் விஜய் ரசிகர்கள்

webteam

விஜய் சம்பந்தமாக கருணாகரன் போட்ட ட்விட் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழ்த்திரை உலகமே வேலை நிறுத்தத்தை கடைப்பிடித்து வருகிறது. அந்த நேரத்தில் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு மட்டும் சிறப்பு அனுமதி பெற்று சென்னை விக்டோரியா மஹாலில் எந்தத் தடையும் இல்லாமல் நடைபெற்று வந்தது. அதனை பலரும் கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் காமெடி நடிகர் கருணாகரன் “தமிழன்னு சொன்னாலே திமிர் ஏறும் உண்மையா? இல்ல ஜஸ்ட் சாங் ஆ” என கேள்வி எழுப்பியிருந்தார். அதாவது சினிமாவில் தமிழர்களின் ஒற்றுமையை பற்றி பேசிவிட்டு தங்களுடைய படப்பிடிப்பை மட்டும் தனியா நடத்துகிறீர்களே இது முறையா? என அர்த்தம் தொனிக்கும் வகையில் அவரது ட்விட் இருப்பதாக பலரும் கூறினர். இந்த ட்விட்டிற்கு முன்பாக மற்றொரு  ட்விட்டில் எஸ்.ஜே.சூர்யாவின் புகைப்படத்தை பதிவிட்டுவிட்டு “ஸ்டிரைக் இருக்கு ஆனா இல்ல” என கூறியிருந்தார்.

இவரது ட்விட் விஜய் ரசிகர்களை எரிச்சல்படுத்திவிட்டது. ஆகவே அவர்கள் கருணாகரன் தங்கிலிஷில் போட்ட ட்விட்டில் உள்ள எழுத்து பிழைகளை வைத்து விமர்சிக்க செய்தனர். அவர் தமிழன் என்பதை Tamizannu என்று எழுதியிருந்தார். அதனை Thamizhannu எழுதணும்னு சொல்ல தொடங்கியவர்கள் வசைமாறி பொழிய தொடங்கிவிட்டனர். இதனால் அவரது ட்விட் சமூக வலைதளத்தில் கடுமையான சர்ச்சையை கிளப்பி வருகிறது.