சினிமா

நாங்கள் தமிழராய் வாழ்வோம்: கரு.பழனியப்பன் கருத்து

நாங்கள் தமிழராய் வாழ்வோம்: கரு.பழனியப்பன் கருத்து

webteam

நாங்கள் தமிழராய் வாழ்வோம் என்று ஹெச்.ராஜாவுக்கு மறைமுகமாக இயக்குநர் கரு.பழனியப்பன் ட்விட்டர் பக்கத்தில் கருத்திட்டு உள்ளார்.

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு எதிரான கருத்தை விஜய் பேசியிருப்பதாக கூறி அந்தக் குறிப்பிட்ட காட்சியை நீக்க வேண்டும் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியிருந்தார். அதையொட்டி பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தனது கருத்தினை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் நடிகர் விஜய்யை ஜோசப் விஜய் என்று மத அடையாளத்தோடு குறிப்பிட்டு எழுதியிருந்தார். 
இதற்கு பதிலளிக்கும் வகையில் இயக்குநர் கரு. பழனியப்பன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ ஜோசப் விஜய், ஜுனைத், ஜமீலா, ஜனநாதன், ஜக்கம்மா என எல்லோரும் சேர்ந்திருப்பதுதானே இந்தியா.? இல்லையெனில் சொல்லிவிடு, நாங்கள் தமிழர்களாய் வாழ்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.