இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ’ரெட்ரோ’. சூர்யா ஜோதிகாவின் 2D Productions, கார்த்திக் சுப்புராஜின் Stone bence நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ஒருபக்கம் பயங்கரமான ஹேங்ஸ்டர், மறுபக்கம் அனைத்திலிருந்தும் விடுபட்டு வாழ நினைக்கும் காதல் என படம் லவ்-ஆக்ஷன் திரைப்படமாக வெளியானது.
கடந்த மே 1-ம் தேதி திரையில் வெளியான ரெட்ரோ திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துவருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம், சூர்யாவிற்கு கம்பேக் திரைப்படமாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில் கலவையான
விமர்சனங்களையே பெற்றுள்ளது.
இந்நிலையில் நெகட்டிவான விமர்சனங்கள் குறித்து பேசியிருக்கும் கார்த்திக் சுப்புராஜ், “ரெட்ரோ படத்தின் அனுபவம், ஆன்லைன் விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்தியது. ரசிகர்களின் உணர்ச்சிகளை திரையரங்கில் புரிந்துகொள்ள முடிகிறது. 200-300 பேர் கொண்ட படக்குழுவின் முயற்சியை வேண்டுமென்றே குறைத்து மதிப்பிடும் விமர்சனங்களை இனி கவனிக்கப் போவதில்லை” கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.