dorothy - karthik subbaraj imdb / video screenshot
சினிமா

’இன்னும் 10 வருஷத்துல..’ எதுக்காக இந்த வசனம் வச்சீங்க? கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் டோரதி திரைப்படம், மூன்றாம் பாலினத்தவர் குறித்து பேசுகிறது. இதில் இடம்பெற்ற முத்த காட்சியும், 10 வருஷத்துல நாங்க தான் என்ற வசனமும் சர்ச்சையாகி வருகிறது.

Rishan Vengai

டோரதி படத்தில் இடம்பெற்ற “10 வருஷத்துல நாங்க தான் நார்மல்” என்ற வசனம், மூன்றாம் பாலினத்தவர்களை மரியாதையுடன் பார்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் அளித்துள்ளார். இந்த வசனம் திணிப்பு போல உள்ளது என சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், இயக்குநரின் விளக்கத்துக்குப் பிறகு பலர் அதன் நோக்கத்தை புரிந்து கொள்கிறதாக கூறப்படுகிறது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ‘டோரதி (Dorothy). கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, இளையராஜா இசையமைத்துள்ளார்.

Dorothy

படம் வெளியாவதற்கு முன்பே டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா (TIFF)-வில் திரையிடப்பட்ட டோரதி, அங்கு பார்வையாளர்கள் நின்று கைதட்டும் வரவேற்பையும் பெற்றது. அதுமட்டுமில்லாமல் அப்போது படத்தை பார்த்த பலரிடமிருந்து பாராட்டையும் பெற்றது.

இதற்கிடையில் இளையராஜா இசையில் வெளிவந்த கல்யாண விருந்து, முத்துமணி பாடலும் ரசிகர்களை கவர்ந்ததால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு எகிறியது.

இந்தசூழலில் 1990 காலகட்டத்தில் மதுரை மண்ணில் நடக்கும் பின்னணியாகக் கொண்ட டோரதி (Dorothy), இரண்டு ஆண்களின் வாழ்க்கையில் ஒரு பெண் வருவதால் உருவாகும் உறவுகளையும், ஆண் திருநங்கையாக மாறும் கருப்பொருளையும் மையமாகக் கொண்டுள்ளது. வழக்கமான காதல் கதையாக இருக்கும் என எதிர்பார்த்த சில ரசிகர்களுக்கு படம் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், படத்தில் இடம்பெற்ற 10 வருஷத்துல நாங்க தான் நார்மல் என்ற வசனமும், இறுதிக்காட்சியில் இடம்பெற்ற முத்தக்காட்சியும் சர்ச்சையாகியுள்ளது.

சமூகவலைதளங்களில் விமர்சித்திருக்கும் சிலர், பாலின மாற்றம் நிகழும் நபர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற கருத்தை ஏற்கிறோம், ஆனால் 10 வருஷத்துல நாங்க தான் நார்மல், இந்த ஊரு அதுக்கப்புறம் உங்கள தான் கேவலமா பார்க்கும் என்ற வசனம் திணிப்பதை போல உள்ளது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தசூழலில் சமீபத்திய உரையாடலில் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம், 10 வருஷம் கழிச்சு இப்போ அந்நியமா பார்க்கப்படுறத எல்லாருமே ஏத்துக்குவாங்கனு தான் சொல்லவந்தீங்களா? எதுக்காக அந்த டயலாக் வச்சீங்க? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அப்படிலாம் பார்க்காதீங்க பயமா இருக்குன்னு சொல்லுவான், ஏன் எங்கள பார்த்து பயப்படுற, ஏன் அந்த பார்வையில என்ன பார்க்குற, உங்க பார்வையால தான் நாங்க பிச்சை எடுக்குறோம், வேறு தொழில்களை செய்கிறோம், ஆனா இன்னும் 10 வருஷம் தான் டா எங்கள எங்களாவே ஏத்துப்பாங்க, மூன்றாம் பாலினத்தவர்களா? நீங்களும் மனிதர்கள்? தான் என்ற மரியாதையோட பார்ப்பாங்க”னு சொல்லுறவிதமாக வைத்தது. தற்போது பலபேர் அந்த வசனம் தவறாக சொல்லப்பட்டதில்லை என்பதை புரிஞ்சிக்குறாங்க” என பேசியுள்ளார்.