சினிமா

கார்த்திக் நரேனின் புதிய படம் அறிவிப்பு

கார்த்திக் நரேனின் புதிய படம் அறிவிப்பு

webteam

'துருவங்கள் பதினாறு ' இயக்குநர் கார்த்திக் நரேனின்  புதிய படத்தின் பெயர் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டில் 100 நாள்கள் ஓடி  மாபெரும் வெற்றி அடைந்த படம் 'துருவங்கள் பதினாறு'. இப்படம்  விமர்சன ரீதியிலும்  வசூலிலும் அதிகம் பேசப்பட்டது.  இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார். இவரின் அடுத்த படத்தை அரவிந்த சாமியை வைத்து இயக்கி வந்தார். அதற்கான படங்களை தன் ட்விட்டர் பக்கத்தில் அரவிந்த் சாமி பகிர்ந்து கொண்டிருந்தார். அதற்கு  'நரகாசுரன்' என தலைப்பிடப்பட்டிருந்தது. இதில் ஸ்ரேயா, சந்தீப் கிருஷ்ணா, ஆத்மிகா நடித்துள்ளனர். இதன் இறுதிக்கட்ட தொழில் நுட்பப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

இந்நிலையில் தன் மூன்றாவது படத்தின் அறிவிப்பைத் தனது ட்விட்டரில் கார்த்திக் நரேன் இன்று வெளியிட்டார். அப்படத்திற்கு 'நாடக மேடை' என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை தன் 'நைட் நாஸ்டால்ஜியா பிலிமோடெய்ன்மெண்ட் '  நிறுவனம் சார்பில் அவர் தயாரிக்கிறார்.

இதற்கு ஒளிப்பதிவு; சுஜித் சரங், இசை; ரோன் ஈத்தன் யோகன், எடிட்டிங்; ஸ்ரீஜித் சரங், கலை; சிவசங்கர் என பலர் பணிபுரிய உள்ளனர். மேலும் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்க உள்ளார்.