சினிமா

10 வருடத்தை நிறைவு செய்த கார்த்தி

10 வருடத்தை நிறைவு செய்த கார்த்தி

webteam

நடிகர் கார்த்தி சினிமாத்துறையில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்றுடன் 10 வருடங்கள் நிறைவடைகின்றன. 2007-ம் ஆண்டு இதே நாளில் அமீர் இயக்கத்தில் அவர் முதல் முதலாக நடித்த பருத்திவீரன் படம் வெளியானது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் கார்த்தி, தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவரது திரைப் பயணம் உயர்வு தாழ்வுகளை கொண்டதாகவும், ஆனால் எல்லா நேரத்திலும் ரசிகர்கள் அவர் மீது அன்பை பொழிந்துள்ளதாகவும் கூறியுள்ளார். தான் ரசிகர்களுக்கு எப்போதும் கடன் பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள கார்த்தி, மேலும் கடினமாக உழைத்து நல்ல படங்களில் தொடர்ந்து நடிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தனது குடும்பம், அண்ணன் சூர்யா, இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தன் படங்களில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் கார்த்தி.