சினிமா

கார்த்தியின் ‘சுல்தான்’ ட்ரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

கார்த்தியின் ‘சுல்தான்’ ட்ரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

sharpana

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ’சுல்தான்’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறது படக்குழு.

கடந்த 2016 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘ரெமோ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார், பாக்கியராஜ் கண்ணன். இவரது அடுத்தப் படமான சுல்தானில் நடிகர் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்கள்.

ராஷ்மிகா நடிக்கும் முதல் தமிழ்படம் சுல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தீரன் அதிகாரம் ஒன்று, ஜோக்கர், அருவி, கைதி உள்ளிட்டப் படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்ஸர்ஸின் எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார்.

வரும் ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட பரபரப்பாக இயங்கி வரும் படக்குழு, சமீபத்தில், இதன் டீசரை வெளியிட்டிருந்தது. டீசரும் அதன் வசனங்களும் வரவேற்பு பெற்ற நிலையில், ட்ரைலர் வரும் 24 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.