Chirajeevi, Karthi Telugu Film
சினிமா

சிரஞ்சீவி படத்தில் நடிக்கும் கார்த்தி? | Chiranjeevi | Karthi

சிரஞ்சீவி - பாபி கொல்லி இதற்கு முன் செய்த `வால்டேர் வீரய்யா' படத்திலும் ரவி தேஜா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருப்பார். அதே போல இப்படத்தில் கார்த்தி ரோல் என சொல்லப்படுகிறது.

Johnson

கார்த்தி தற்போது தமிழ் இயக்கிவரும் `மார்ஷல்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது அவர் சீக்கிரமே ஒரு நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்கப் போகிறார் என சொல்லப்படுகிறது. 2016ல் வம்சி இயக்கத்தில் நாகார்ஜுனாவுடன் தோழா (ஊப்பிரி) படத்தில் நடித்தார். இது தமிழ் - தெலுங்கு பைலிங்குவகால உருவானது. கார்த்தியின் பல படங்களுக்கு தெலுங்கில் பெரிய வரவேற்பு உண்டு. நானி நடித்த HIT 3 படத்திலும் ஒரு கேமியோ ரோலில் நடித்தார் கார்த்தி.

இப்போது விஷயம் என்னவென்றால், `வால்டேர் வீரய்யா' படத்திற்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவி மற்றும் இயக்குனர் பாபி கொல்லி இணைந்து புதிய படம் ஒன்றில் பணியாற்ற உள்ளனர். இப்படத்தை `ஜனநாயகன்' பட தயாரிப்பு நிறுவனம் கே வி என் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் கார்த்தி நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. சிரஞ்சீவி - பாபி கொல்லி இதற்கு முன் செய்த `வால்டேர் வீரய்யா' படத்திலும் ரவி தேஜா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருப்பார். இப்போது சிரஞ்சீவி நடித்து வரும்  `மன சங்கர வர பிரசாத் காரு' படத்திலும் வெங்கடேஷ் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே போல இப்படத்தில் கார்த்தி ரோல் என சொல்லப்படுகிறது.

சிரஞ்சீவி தனது தற்போது நடித்துவரும் `மன சங்கர வர பிரசாத் காரு' மற்றும் `விஸ்வம்பரா' படங்கள் முடிந்த  பிறகு இப்படம் துவங்கவுள்ளதாம். தற்போது கார்த்தியின் நடித்துள்ள 'வா வாத்தியார்' டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது, 'சர்தார் 2' படமும் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. அதைத் தொடர்ந்து 'மார்ஷல்' படத்திலும் அவர் பணியாற்றி வருகிறார். மேலும் தெலுங்கில் உருவாக்கவுள்ள HIT 4 படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் கார்த்தி.