சினிமா

கபில் தேவின் வாழ்க்கைப் படம் "83" ஜூன் மாதம் வெளியீடு!

jagadeesh

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் வாழ்க்கை வரலாற்றுபடமான "83" ஜூன் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி 1983-ஆம் ஆண்டில் கபில்தேவ் தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க உலகக் கோப்பையை வென்றது. அந்த வெற்றிக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் ‘83’ படத்தினை கபீர் கான் இயக்கி வருகிறார். இது கபில்தேவின் உண்மைக் கதையாகும். ரன்வீர் இந்தப் படத்தில் கபில் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கபிலின் மனைவியான ரோமியா பாடியா வேடத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார். இருவரும் திருமணம் முடிந்த பிறகு இணைந்து நடிக்கும் முதல் படம் இதுதான்.

இந்தப்படத்தில் தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார். கடந்த ஆண்டு ரன்வீர் சிங், தனது பிறந்தநாளில் '83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். இதில் அவர் இளைய கபில்தேவ் போன்று அப்படியே இருந்தார். அப்படம் கபில் ரசிகர்களை மேலும் சுறுசுறுப்பாக்கியது. இத்திரைப்படம் கடந்த ஆண்டே வெளியாகி இருக்க வேண்டியது. ஆனால் கொரோனா காரணமாக படத்தின் இறுதிக்கட்ட வேலைகளும் தள்ளிப்போனது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி "83" திரைப்படம் ஜூன் 4 ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகும் என ரன்வீர் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.