சினிமா

‘கண்ணே கலைமானே’ ஷுட்டிங் முடிந்தது

‘கண்ணே கலைமானே’ ஷுட்டிங் முடிந்தது

webteam

சீனி ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

நடிகர் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கண்ணே கலைமானே’. இதனை இயக்குநர் சீனு ராமசாமி இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரை, வாடிப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. கடந்த 10 ஆம் தேதி கொடைக்கானலில் தொடங்கிய படப்பிடிப்பு, நிறைவு பெற்றுள்ளது. பகுதிகளில் நடைபெற்று வந்தது. இதில் நடிகை தமன்னா நாயகியாக நடித்துள்ளார்.

மேலும், சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்கிறார். இதனை ரெட்ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக இயக்குநர் சீனி ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் உடன் உழைத்த சினிமா தொழிலாளர்களுக்கும் அனைத்து கலைஞர்களுக்கு அன்பும் நன்றியும் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பல படங்களை அவர் தனது பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.