model image x page
சினிமா

வெறும் 60 காட்சிகள்.. ரூ.50 கோடி வசூல்.. திரையுலகைப் புரட்டிப்போட்ட புதிய பிளாக்பஸ்டர்!

படம் பார்த்த பார்வையாளர்களின் வலுவான வாய்மொழிப் பாராட்டுகாரணமாக, இரண்டு வாரங்களுக்குள் திரையரங்கக் காட்சிகள் 1,200-க்கும் மேலாக அதிகரிக்கப்பட்டன.

Prakash J

கன்னடத் திரையுலகில் குறைந்த பட்ஜெட்டில் உருவான 'பிரேமதா ஊராளி' (Premada Oorali) திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. செப்டம்பர் 25, 2026 அன்று வெளியான இப்படம், முதல் நாளில் பெரிய எதிர்பார்ப்புகளோ விளம்பரங்களோ இன்றி வெறும் 60 காட்சிகளுடன் மட்டுமே தொடங்கியது.

மனோஜ் குமார் இயக்கத்தில் உருவான 'பிரேமதா ஊராளி' படத்தில் புதுமுக நடிகர் ஸ்ரீராம் கதாநாயகனாக நடிக்க, மூத்த நடிகர் ரங்காயண ரகு, தபஸ்வினி பூனச்சா மற்றும் ரமிகா ஷிவு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரிய நட்சத்திர பட்டாளம் இல்லை என்றாலும், கிராமத்துப் பின்னணியில் குடும்ப உறவுகளையும், உணர்வுப்பூர்வமான எளிய காதல் கதையையும் எதார்த்தமாகச் சொன்ன விதம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் திரையரங்குகளுக்கு இழுத்தது.

செப்டம்பர் 25, 2026 அன்று வெளியான இப்படம், முதல் நாளில் பெரிய எதிர்பார்ப்புகளோ விளம்பரங்களோ இன்றி வெறும் 60 காட்சிகளுடன் மட்டுமே தொடங்கியது. படம் பார்த்த பார்வையாளர்களின் வலுவான வாய்மொழிப் பாராட்டுகாரணமாக, இரண்டு வாரங்களுக்குள் திரையரங்கக் காட்சிகள் 1,200-க்கும் மேலாக அதிகரிக்கப்பட்டன. அடுத்து, மூன்றாம் வாரத்திலேயே உலகளவில் ₹50 கோடிக்கும் அதிகமான மொத்த வசூலைக் கடந்து, மிகக் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டிய திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.