சினிமா

கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் மரணம்

கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் மரணம்

webteam

கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 39. சிரஞ்சீவி சர்ஜாவின் அகால மரணம் கன்னட திரையுலகம் மட்டுமின்றி இந்தியத் திரையுலகினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2009ம் ஆண்டு திரையுலகில் கால் பதித்த சிரஞ்சீவி சர்ஜா இதுவரை 19 படங்களில் நடித்துள்ளார்.சில படங்கள் ரிலீசுக்கு தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் திடீர் மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சு வலி காரணமாக ஜெயநகரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நடிகர் சிரஞ்சீவி சர்ஜா நடிகர் அர்ஜூனின் உறவினர் ஆவார்.

நடிகை மேக்னா ராஜை 2018ம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சிரஞ்சீவி சர்ஜாவின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.