சினிமா

சுஷாந்த் மரணம்: தீபிகா படுகோனை மறைமுகமாக விமர்சித்த கங்கனா ரனாவத்!

சுஷாந்த் மரணம்: தீபிகா படுகோனை மறைமுகமாக விமர்சித்த கங்கனா ரனாவத்!

webteam

சுஷாந்த் சிங் வழக்கை நீதிமன்றம் சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட்டதையடுத்து, பேட்டி அளித்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், மறைமுகமாக நடிகை தீபிகா படுகோனின் செயல்களை விமர்சித்துள்ளார்.

சுஷாந்த் சிங்கின் இறப்புக்குப் பிறகு பாலிவுட் உலகம்  நெப்போட்டிசம் என்ற அதிர்வலைக்குள் சிக்கியது. குறிப்பாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், சுஷாந்த் சிங் தற்கொலைக்கு சில முக்கிய புள்ளிகளே காரணம் என வெளிப்படையாக தனது விமர்சனங்களை வைத்தார். அதற்கு சமூக வலைதளத்தில் ஏகோபித்த வரவேற்பும் இருந்தது.

இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்றம் சுஷாந்தின் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து எக்னாமிக்ஸ் டைம்ஸ் கங்கனாவிடம் பேட்டி எடுத்தது. அதில் பேசிய அவர் மறைமுகமாக நடிகை தீபிகா படுகோனின் செயல்களை விமர்சித்திருந்தார். அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் செய்தியாக வெளியிட்டார்.

சுஷாந்தின் இறப்புக்கு பிறகு நடிகை தீபிகா படுகோன் அவரது ட்விட்டர் பக்கத்தில் Repeat after me என்ற தலைப்பின் கீழ் மனப்பிரச்னைகள் குறித்த சில கருத்துகளை வெளியிட்டு வந்தார்.

அதனை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் பேசிய கங்கனா சிலர் சுஷாந்தின் இறப்பை மன அழுத்தம், பாலியியல் வன்கொடுமை, போதைப்பழக்கம் ஆகியவற்றுடன் தொடர்பு படுத்தி பேசுகிறார்கள். ஆனால் இன்று அவர் எங்கேயும் கடவுளுக்கு நிகராக பார்க்கப்படுகிறார்”  என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அவர் சுஷாந்த் மன அழுத்தத்தின் காரணமாகத்தான் இறந்தார் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றும் அதனால் மன அழுத்ததை பிராண்ட் செய்யும் வேலைகளை செய்வோர் அதனை நிறுத்த வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.