சினிமா

கங்கனா ராவத் டேட்டிங் விவகாரம்: பிரபல நடிகரின் மனைவி வருத்தம்

கங்கனா ராவத் டேட்டிங் விவகாரம்: பிரபல நடிகரின் மனைவி வருத்தம்

webteam

தனது கணவருடன் டேட்டிங் சென்றதாக நடிகை கங்கனா ரனாவத் கூறியது தங்களது மகள்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது என நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மனைவி ஜரினா குற்றம்சாட்டியுள்ளார். 

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும், நடிகர் ஆதித்யா பஞ்சோலியும் ஒரு காலத்தில் காதலித்தது வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை சமீபத்தில் வெளிப்படையாக கங்கனா ரனாவத் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து கங்கனாவை காதலிக்கவில்லை. அவர் பைத்தியம் என ஆதித்யா  பஞ்சோலி தெரிவித்து இருந்தார். ஆதித்ய பஞ்சோலிக்கு கங்கனா ராவத்தின் அப்பா வயதிருக்கும். அவருக்கும் கங்கனா ரனாவத்துக்கும் காதலா என பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சோலியின் மனைவி ஜரினா ‘இளம் வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒரு வயதான குழந்தையும் என ஆதித்யா பஞ்சோலிக்கு மகள்கள் உள்ளனர். இந்த விவகாரம் குறித்து எனது மகள் கேட்கும் கேள்விகளை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. 4 ஆண்டுகளுக்கும் மேல் டேட்டிங்கில் இருந்ததாக கங்கனா தெரிவித்துள்ளார். அவர் பேசிய வார்த்தைகள் எனக்கு பலத்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது’எனத் தெரிவித்துள்ளார்.