சினிமா

'நீங்கள் சாதாரண மனிதரல்ல, உங்களை மிஸ் செய்கிறேன்’ - ஏ.எல்.விஜய் குறித்து கங்கனா ரனாவத்

webteam

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். எம்.ஜி. ஆர். வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார். இந்தப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்குகிறார். ஏப்ரல் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது கங்கனா ரனாவத் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஏ.எல்.விஜய் பாராட்டி சில பதிவுகளை பதிவிட்டுள்ளார்.

அதில், “ அன்புள்ள விஜய் சார், படத்தின் முதல் பகுதிக்கான  டப்பிங் நிறைவு பெற்றது. இராண்டாம் பகுதியின் டப்பிங் இன்னும் இருக்கிறது. நமது இருவருக்குமான பயணம் முடிவுக்கு வர இருக்கிறது. நான் இதைப்பற்றி நினைக்கும் போதெல்லாம், எனக்கு இது முடிந்து விட்டது என்ற எண்ணம் வரவில்லை. மாறாக இந்த உணர்வு நான் உங்களை மிஸ் செய்கிறேன் என்பதையே உணர்த்துகிறது.

முதலாவதாக, நான் உங்களை கவனித்த வரை நீங்கள் டீ, காஃபி, வொய்ன், மாமிசம், பார்ட்டி ஆகியவற்றை உங்களை நெருங்க விடுவதில்லை. ஆனால் மெதுவாகத்தான் நான் புரிந்து கொண்டேன் நீங்கள் அதற்கு வெகுதொலைவில் இல்லை என்பதை.

ஒரு கலைஞனாக இருக்கும் போது மட்டும் உங்கள் கண்கள் பிரகாசமாக இருப்பதில்லை, மாறாக ஏற்றத் தாழ்வுகளை சந்திக்கும் போது உங்கள் கண்கள் பிரகாசமாக இருக்கின்றன. நான் உங்களிடன் கோபம், பாதுகாப்பின்மை, விரக்தி ஆகியவற்றுக்கான அறிகுறியை பார்த்ததில்லை.

தலைமுறை தலைமுறையாக பணியாற்றிவர்கள் உங்களைப் பற்றி பேசும் போது அவர்களின் கண்கள் ஒளிர்கின்றன. நீங்கள் சாதரண மனிதரல்ல நீங்கள் ஒரு தேவதை. எனது ஆழ்மனதிலிருந்து உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் உங்களை மிஸ் செய்கிறேன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். “ என்று குறிப்பிட்டுள்ளார்.