சினிமா

”பிரதமரே உங்கள் கண்ணீரை நான் ஏற்றுக்கொள்கிறேன்: இந்தியர்களே பார்வையை மாற்றுங்கள்”: கங்கனா

”பிரதமரே உங்கள் கண்ணீரை நான் ஏற்றுக்கொள்கிறேன்: இந்தியர்களே பார்வையை மாற்றுங்கள்”: கங்கனா

sharpana

கொரோனாவால் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கண்ணீர் வடித்த பிரதமர் மோடியின் செயலை,”பிரதமரே நான் உங்கள் கண்ணீரை ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார் நடிகை கங்கனா ரனாவத்.

 கொரோனாவின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையொட்டி, இன்று மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுடன் வாரணாசியில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசியவர், “கொரோனா நம்மிடமிருந்து நிறைய பேரை பறித்துவிட்டது. கொரோனாவால் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றுக்கூறி கண்ணீர் வடித்தார். அவரின் கண்ணீர் வடித்ததை சமூக வலைதளங்களில் மக்கள் ட்ரோல் செய்து விமர்சித்தனர்.

இந்நிலையில்,நடிகை கங்கனா ரனாவத், தனது பேஸ்புக் பக்கத்தில்,  ”கண்ணீர் உண்மையோ பொய்யோ, உங்கள் உணர்வு அல்லது மற்றவர்களின் துக்கத்தையோ அவர்களின் வலியையோ தெரிந்து அவர்கள் மேல் அக்கறை கொண்டு வருந்தும் அளவு இருக்கிறார். ஒருவர் தன் வலியை பகிர்ந்து அதை வெளியேற்ற வேண்டும். அந்த கண்ணீர் தெரியாமலோ அல்லது தெரிந்தோ வந்தால் கூட அதற்கு என்ன? அதுவா நமக்கு முக்கியம்?

சிலர் எல்லா தீர்வுகளுக்கும்  ஒரு பிரச்சனை கண்டு பிடிப்பார்கள். நான் உங்கள் கண்ணீரை ஏற்றுக்கொள்கிறேன் பிரமதரே. நான் உங்கள் துக்கத்தை பகிர அனுமதிக்கிறேன். ஜெய் ஹிந்த். டியர் இந்தியரர்களே எல்லா ஆசீர்வாதத்தையும் துன்பம் ஆக்காதீர்கள். உங்கள் அணுகுமுறையையும் உங்கள் பார்வையையும் சரியாக தேர்ந்து எடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.