சினிமா

இந்தியில் ‘காஞ்சனா 2’ ரீமேக்?

இந்தியில் ‘காஞ்சனா 2’ ரீமேக்?

webteam

ராகவா லாரன்ஸுக்கு தமிழ் சினிமா வரலாற்றில், ஒரு திருப்பத்தை கொடுத்த படம் 'முனி'. இதனால் அந்தப் படத்தின் மூன்று பாகங்களை எடுத்து வெற்றி கண்டுள்ள லாரன்ஸ், தற்போது 4ஆம் பாகத்தையும் எடுத்து வருகிறார். முன்னதாக வெளியான மூன்று படங்களில், கடைசியாக வெளியான ‘காஞ்சனா 2’ வசூலை வாரி குவித்தது. இந்தப் படத்தில் லாரன்ஸுடன், டாப்சி மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். இதில் குழந்தை வேடத்தில் ‘லாரன்ஸ்’ போட்ட பேயாட்டம் அனைவரையும் கவர்ந்தது.

இந்நிலையில் ‘காஞ்சனா 2’ படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதில் ஹீரோவாக அக்‌ஷய் குமார் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பாலிவுட் என்பதால், கோலிவுட்டை விட பிரம்மாண்டம் அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களும் இனிமேல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.