சினிமா

நாளை வெளியாகிறது ‘கனா’ ட்ரைலர்

நாளை வெளியாகிறது ‘கனா’ ட்ரைலர்

webteam

தமிழ் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். தற்போது தவிர்க்க முடியாத ஒரு நாயகனாகவும் வளர்ந்துள்ளார். 

நடிகனாக இருந்த அவர் தற்போது தயாரிப்பாளராக அவதாரமெடுத்துள்ளார். இவர் தயாரிக்கும் படத்தில் தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பர் அருண்ராஜா காமராஜை இயக்குனராக அறிமுகப்படுத்தியுள்ளார். 

சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் பெயர் ‘கனா’ என கடந்த மே 5 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 

பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்திற்கு பலத்த எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்த படத்தில் வரும் ‘யார் இந்த தேவதை’ பாடல் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். 

இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாக உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.