சினிமா

'விக்ரம்' ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி தளம்! இயக்குநர் நெகிழ்ச்சி பதிவு

நிவேதா ஜெகராஜா

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' திரைப்படத்தின் ஓடிடி உரிமையை 'டிஸ்னி ஹாட்ஸ்டார்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசன் நடித்து தயாரிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் என நட்சத்திர நடிகர்களுடன் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி திரைக்கு வருகிறது. 'விக்ரம்' திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், ஓடிடியில் ஒளிபரப்பும் உரிமையை 'டிஸ்னி ஹாட்ஸ்டார்' நிறுவனம் பெற்றுள்ளது. இதை உறுதிசெய்யும் வகையில் விஜய் தொலைக்காட்சி சமூக வலைதளங்களில் `மிகவும் பெருமையுடன் இதை அறிவிக்கிறோம்’ என்று தெரிவித்திருக்கின்றது.

இதனிடையே, கமல்ஹாசனுடன்தாம் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளிட்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். `36 வருட தவம்! எனக்குள் இருக்கும் இயக்குநரை என் உலகநாயகன் கமல்ஹாசன் பாராட்ட’ என்று பதிவிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். இது விக்ரம் படம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படத்துக்கான விளம்பரங்களை பிரம்மாண்டமாக மேற்கொண்டுள்ளது படக்குழு. படத்தை ரயில் பெட்டிகளில் மிகப்பெரிய அளவில் ஒட்டி விளம்பரம் செய்துவருகிறது.