சினிமா

மாநகரம், கைதி பாணியிலேயே கமல்ஹாசனின் விக்ரம் படமும் - லோகேஷ் ப்ளான்

மாநகரம், கைதி பாணியிலேயே கமல்ஹாசனின் விக்ரம் படமும் - லோகேஷ் ப்ளான்

sharpana

மாநகரம், கைதி படங்களைப் போலவே கமல்ஹாசனின் விக்ரம் படத்தையும் இரவிலேயே லோகேஷ் கனகராஜ் படமாக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

 மாநகரம், கைதி, மாஸ்டர் படத்திற்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனுடன் இணைந்திருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். கமல்ஹாசனின் 232 வது படம் இது. இந்நிலையில், கிராமத்து பின்னணி கதைக்கொண்ட ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் தலைப்பு ‘விக்ரம்’ கமலின் 66 வது பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில், மாநகரம், கைதி படங்களைப் போலவே, விக்ரம் படத்தையும் லோகேஷ் கனகராஜ் இரவிலேயே படமாக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இம்மாதம் இறுதியில் தொடங்கும் இப்படத்திற்கு கமல் ஒரு மாதம் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு சந்தீப் கிருஷ்ணன், ரெஜினா நடிப்பில் வெளியான ‘மாநகரம்’ படம் பெரும்பாலும் இரவில்தான் படமாக்கப்பட்டது. அதேபோல, கைதியும் இரவில்தான். இரண்டு படங்களுக்குமே எஸ். ஆர் பிரபுதான் தயாரிப்பாளார். ஆனால், விக்ரம் படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம்தான் தயாரிக்கிறது.