நாகேஷை நினைக்காத நாளில்லை என்று தனது ட்விட்டரில் கமல் கூறிவுள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகர் நாகேஷின் பிறந்த நாள் நேற்று. ஆனால் நாகேஷை குறித்து கமல் ஒரு கருத்தையும் நேற்று பதிவிடவில்லை. தனது எல்லா பேட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நாகேஷை குறித்து பேசிக் கொண்டே இருப்பார் இவர். இருந்தும் அவர் ஏன் பதிவிடவில்லை என ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில் இன்று மனோரமா மற்றும் நாகேஷ் நடுவில் அவர் நிற்பதை போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் 60களுக்கு பிறகு நம் தமிழ் சினிமா நகைச்சுவைக்கு அப்பா நாகேஷ் என்றும் அம்மா மனோரமா என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இப்புகைப்படம் எடுத்த நாளை மறவேன் எனவும் இவர்களை நினைக்காத நாட்கள் மிகவும் குறைவு எனவும் கூறியிருக்கிறார்.