பீட்டா அமைப்பை தடை செய்யத் தேவையில்லை என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன், ‘பீட்டா அமைப்பை தடை செய்யத் தேவையில்லை என்று கூறியுள்ளார். எந்த ஒரு அமைப்பையும் தடை செய்ய கூடாது என்றும் அதற்கு பதிலாக அந்த அமைப்பை முறைப்படுத்தலாம் என கேட்டுக்கொண்டார். விலங்குகளின் நலனை காப்பாற்ற விலங்கு நல ஆர்வலர்கள், அமைப்புகள் கண்டிப்பாக தேவை என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அனைத்து அமைப்புகளின் செயல்பாடுகளையும் முறைபடுத்தி அவை தொடர்ந்து செயல்பட வழி செய்ய வேண்டுமே தவிர தடைவிதிக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பீட்டா அமைப்பு இருமுகம் காட்டக்கூடாது என்றும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவே தான் எப்போதும் இருப்பேன் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.