kamal thug life web
சினிமா

'தக் லைஃப்' திரைப்படம் இணையதளத்தில் வெளியீடு.. படக் குழுவினர் அதிர்ச்சி!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் மற்றும் சிம்புவின் நடிப்பில் உருவாகியிருக்கும் ’தக் லைஃப்’ திரைப்படம் வெளியான இன்றே இணையத்திலும் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர் - மருதுபாண்டி

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

kamal thug life

அண்மையில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

படம் இணையத்தில் வெளியானதால் அதிர்ச்சி!

இந்நிலையில், தக் லைஃப் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கும் சூழலில், இணையத்தில் திரைப்படம் வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் வெளியானது தக் லைஃப்- படக்குழு அதிர்ச்சி

ஏற்கனவே அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படமும் திரையரங்கில் வெளியான சில நாளில் இணையதளத்தில் வெளியாது. இந்த சூழலில் இன்று வெளியான தக் லைஃப் படமும் இணையத்தில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படம் இணையதளத்தில் வெளியாவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

படம் வெளியாகி முதல்நாளில் கலவையான விமர்சனத்தை பெற்றுவருகிறது.