கமல்-ஷங்கர் கூட்டணியில் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
1996-ல் வெளிவந்து ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்ட திரைப்படம் இந்தியன். சமூக அநீதி, லஞ்சத்திற்கு எதிராக தயாராகி வெளிவந்த இந்தப் படத்தின் பல காட்சிகள் இன்றும் ரசிகர்களின் பாராட்டுதலைப் பெற்று வருகின்றன. இந்நிலையில், ஷங்கர் அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஷங்கர் தற்போது 2.0 திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.