சினிமா

கமலின் வலது கை சந்திரஹாசன்: திரையுலகினர் தகவல்

கமலின் வலது கை சந்திரஹாசன்: திரையுலகினர் தகவல்

webteam

மறைந்த சந்திரஹாசன், கமல்ஹாசனின் வலது கை போன்று இருந்தவர் என்று திரையுலகினர் தெரிவித்தனர்.

கமல்ஹாசன் அண்ணன், சந்திரஹாசன் லண்டனின் இன்று காலை மரணமடைந்தார். இவரும், கமல்ஹாசன் மற்றொரு அண்ணன் சாருஹாசனைப் போலவே வழக்கறிஞருக்குப் படித்தவர். ஆனால், கமல்ஹாசனின் அனைத்து வேலைகளையும் இவர்தான் கவனித்து வந்தார். கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளராகவும் இருந்த இவர், கமல்ஹாசனின் கால்ஷீட் தொடர்பான விஷயங்களையும் கவனித்து வந்தார். ’விஸ்வரூபம்’ பட பிரச்னை ஏற்பட்டபோது அதைச் சட்டப்படி எதிர்கொள்வதற்கான வேலைகளில் ஈடுபட்டவர் இவர்தான். ‘என் அண்ணன் சந்திரஹாசன் இல்லையென்றால் என்னால் நல்ல படங்களைத் தயாரித்திருக்க முடியாது’ என்று கமல்ஹாசனே பலமுறை கூறியிருக்கிறார். ’அவரது வலது கை போன்று இருந்தவர் சந்திரஹாசன்’என்று திரையுலகினர் தெரிவித்தனர்.

அண்ணன் சந்திரஹாசனின் மறைவை அடுத்து லண்டன் செல்வதற்கான மும்முரத்தில் கமல்ஹாசன் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.