சினிமா

இனி ஒரு சிலை செய்வோம், அதை எந்த நாளும் காப்போம்: கமல் ட்வீட்

இனி ஒரு சிலை செய்வோம், அதை எந்த நாளும் காப்போம்: கமல் ட்வீட்

webteam

நடிகர் தி‌லகம் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டது குறித்து நடிகர் கமல்‌ஹாசன் ட்‌விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் நடிகர் கமல்ஹாசன் நாள்தோறும் ஒரு பதிவை முன்வைத்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இந்நிலையில் சென்னை மெரினாவில் இருந்து இரவோடு இரவாக நடிகர் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்ட விவகாரம் குறித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், ரசிகர்கள் மனதிலும், நடிக்‌க நினைத்த தமிழன் மனதிலும் ‌பதிந்தவர்‌‌ சிவாஜி என்று கூறியி‌ருக்கிறார். மேலும், இனி ஒரு சிலை செய்வோம், அதை எந்த நாளும் காப்போம், அரசுக்கும் அப்பால் என்று பதிவிட்டுள்ளார். மேலும், சிவாஜியை என் அப்பா என்று கூறியுள்ளார்.

சிவாஜி உயிரோடு இருந்தபோதே கமலை என் மூத்த பிள்ளை என்று கூறியதும், பிரபுவும், ராம்குமாரும் கமலை எங்கள் அண்ணன் என்று பாசத்தைப் பொழிவதும் அனைவரும் அறிந்ததே.