சினிமா

“வேலைக்காரர்கள் எஜமானர்களாகிவிட்டனர்” - ‘பிக்பாஸ்’ கமல்ஹாசன்

“வேலைக்காரர்கள் எஜமானர்களாகிவிட்டனர்” - ‘பிக்பாஸ்’ கமல்ஹாசன்

Rasus

வேலைக்காரர்கள் எல்லோரும் எஜமானர்கள் ஆகிவிட்டதாக பிக்பாஸ் ப்ரோமோ வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மொத்தம் 16 பேர் போட்டியாளராக பங்கேற்றுள்ளனர். இதுவரை எந்தவொரு போட்டியாளரும் எலிமினேட் செய்யப்படவில்லை. எனவே நாளுக்கு நாள் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்குள் வாக்குவாதம் அதிகரித்து வருவதால் நிகழ்ச்சி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே கமல் போட்டியாளர்களுடன் உரையாடுவார்.

இந்நிலையில் இன்று புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் பேசும் கமல்ஹாசன், “ எஜமானர்கள் எல்லோரும் சேர்ந்து வேலைக்காரர்களை தேர்ந்தெடுத்தனர். ஆனால் காலத்தின் கோலம் வேலைக்காரர்கள் எல்லோரும் எஜமானர்களாகிவிட்டனர்” என கூறியுள்ளார்.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில், ஆண்கள் அனைவரும் எஜமானர்களாக இருந்தனர். அவர்களுக்கு உதவும் வகையில் உதவியாளர்களாக நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் இருந்தனர். பின்னர் அடுத்த நாளே உதவியாளராக இருந்த பெண்கள் அனைவரும் எஜமானர்களாக்கப்பட்டனர். ஆண்கள் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற வகையில் டாஸ்க் அமைந்தது. இதனை குறிப்பிட்டே நடிகர் கமல்ஹாசன் இவ்வாறு பேசியதாக தெரிகிறது.