சினிமா

சந்திரஹாசன் எனக்கு வழிகாட்டி: கமல்

சந்திரஹாசன் எனக்கு வழிகாட்டி: கமல்

Rasus

சந்திரஹாசன் தனக்கு வழிகாட்டி என கமல் கூறினார்.

கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசனின் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால் உள்ளிட்ட திரைப்படத் துறையினரும் இதில் பங்கேற்று தங்கள் அஞ்சலியை செலுத்தினர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ‘என் அண்ணன் சந்திரஹாசனின் அறிவுரை இல்லாமல் நான் நடத்தும் முதல் நிகழ்ச்சி இது. அவர்தான், என் வாழ்நாளில் எனக்கான வழிகாட்டியாக இருந்தார். என்னுள் நற்பண்புகளை விதைத்தவர், எனக்கு மரியாதையாக நடந்துகொள்ளக் கற்றுக்கொடுத்தவர் என புகழாரம் சூட்டினார்.