அமிதாப், சல்மான்கான் போன்ற பிரபல நடிகர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்களாக உள்ள நிலையில் கமல்ஹாசனும் இதே பாதையில் பயணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது கமல் சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்துக் கொடுத்த பின்பு டிவி தொகுப்பாளர் பணியை ஏற்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறது.