நடிகர் ரஜினிகாந்த்துக்கு கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான ரஜினி, 40-ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். அத்துடன் தற்போது அரசியலிலும் களம் இறங்கியுள்ள அவர் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று ரஜினி தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவரின் ஏராளமான ரசிகர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல நடிகர் கமல்ஹாசனும் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “என் பல ஆண்டு நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்.” என கூறியுள்ளார்.