நவம்பரில் கட்சி தொடங்கவில்லை என்று கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளிவித்துள்ளார்.
சமீபகாலமாக அரசியல் கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வந்தார் கமல். ஆகவே அவர் தனிக் கட்சி தொடங்க இருப்பதாகவும் அதற்கான அறிவிப்பு அவரது பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி வெளியாகும் எனவும் ஊடகங்களில் செய்திகள் வலம் வந்தன. இந்தநிலையில் அவர் இன்று தனது ட்விட்டரில் “ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர்.7ல் இயக்கத்தார் கூடுவது எம் பலவருட வழக்கம். பொது அறிவுப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும்” என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் கமல் தனது முடிவில் ஏதோ மாற்றம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளிவர தொடங்கியுள்ளன.