விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.
சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் மையத்தில் நடக்கும் படப்பிடிப்பில் கமல் மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதற்கான புகைப்படத்தை கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படம் தமிழில் விஸ்வரூபம் 2 என்றும், இந்தியில் விஸ்வரூப் 3 என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டுள்ள கமல், “பெண் ராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கும் நாட்டின் ஒரே பயிற்சி மையமான சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தால் நானும் இந்த நாடும் பெருமையடைகிறோம். பெண்கள் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன், குறிப்பாக எனக்கு மிகவும் பிடித்த எனது பாரதத் தாய்க்கு. மா துஜே சலாம்” என்று பதிவிட்டுள்ளார்.
மா துஜே சலாம் என்றால் ‘தாயே உனக்கு வணக்கம்’ என்று பொருள். ஏற்கனவே முக்கால்வாசி படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில் விஸ்வரூபம் - 2 படம் அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.