லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று தகவல்கள் கசிந்திருக்கின்றன.
மாநகரம், கைதி, மாஸ்டர் படத்திற்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனுடன் இணைந்திருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். கமல்ஹாசனின் 232 வது படமான, இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், கிராமத்து பின்னணி கதைக்கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் மற்ற நடிகர்களின் விவரங்களும் கமலின் 66 வது பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என்று தவகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.