Kalki  X- Vyjayanthi Movies
சினிமா

‘கல்கி 2898 AD’ பார்ட் 2.. நாக் அஸ்வின் சொன்ன BIG UPDATE!

கல்கி 2898 AD’ பார்ட் 2 குறித்து பதில் அளித்துள்ளார் இயக்குநர் நாக் அஸ்வின்.

PT WEB

செய்தியாளர் - M.மீரா

பிரபாஸ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘கல்கி 2898 AD படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கியமான அப்டேட்டை இயக்குநர் நாக் அஸ்வின் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம், அதாவது அக்டோபர் 2026-ல் ‘கல்கி 2898 AD – Part 2 படப்பிடிப்பு வழக்கமான முறையில் தொடங்கும் என்றும், படப்பிடிப்பை 2027-ம் ஆண்டு மத்தியில் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

‘கல்கி 2898 AD’ திரைப்படம் சமீபத்தில் நடைபெற்ற 72-ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் இரண்டு விருதுகளை வென்றது. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான விருதும், சிறந்த சிறப்பு விளைவுகளுக்கான விருதும் படத்துக்கு கிடைத்தன.

Nag Ashwin

இதுகுறித்து பேசிய நாக் அஸ்வின், தேசிய விருதுகள் படக்குழுவினருக்கு தொடர்ந்து பணியாற்றுவதற்கான புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், முதல் பாகத்தின் வெற்றி குறித்து பேசிய அவர், ஒரு வெற்றுக் காகிதத்தில் தொடங்கிய கதை, திரையில் மிகப்பெரிய திரைப்படமாக உருவாகி, இந்தியா மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலும் ரசிகர்களைச் சென்றடைந்ததே தங்களுக்கு முக்கியமான பயணம் என குறிப்பிட்டார். படத்தின் வசூல் வெற்றி ஒரு முக்கியமான அங்கீகாரம் என்றாலும், வெளியான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிகர்கள் ‘Part 2 எப்போது வரும் என கேட்பதே மிகப்பெரிய அங்கீகாரம் என நாக் அஸ்வின் கூறினார்.

Kalki

மேலும், ‘கல்கி 2898 AD’ படத்துக்கு Production Design பிரிவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். புராணக் கதைகளையும் அறிவியல் புனைகதையையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் உலகத்தை உருவாக்குவதில் ஏராளமான தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் கடுமையாக உழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.