சினிமா

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த காளிதாஸ் ஜெயராம்; அதிகாரபூர்வ அறிவிப்பு

sharpana

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்திருக்கிறார் காளிதாஸ் ஜெயராம்.

’மாஸ்டர்’ வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கான, பணிகள் கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்று வந்தன. தேர்தல், கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்தது. தற்போது, தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளதால் 'விக்ரம்' படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் இணைந்துள்ள நிலையில், தற்போது நடிகர் காளிதாஸ் ஜெயராமும் இணைந்திருக்கிறார். வேஷ்டி சட்டையில் கமல்ஹாசனுடன் காளிதாஸ் ஜெயராம் உற்சாகமுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. இப்படத்தில், கமல்ஹாசனின் மகனாக நடிக்கிறார் காளிதாஸ் ஜெயராம்.