சினிமா

காலா படத்திற்கு புதிய சிக்கல்?

காலா படத்திற்கு புதிய சிக்கல்?

webteam

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் காலா திரைப்படத்தை கரிகாலன் என்ற அடைமொழியுடன் தயாரிக்க தடை கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ராஜசேகரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கரிகாலன் என்ற பெயரை தாம் 1994ம் ஆண்டே தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே அந்தப் பெயரை பயன்படுத்த தடை விதிக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கவேண்டும் என நடிகர் ரஜினிகாந்த், திரைப்படத்தின் இயக்குநர் ரஞ்சித், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.