சினிமா

'கடைசி விவசாயி' யை இயக்கும் காக்கா முட்டை மணிகண்டன்!

'கடைசி விவசாயி' யை இயக்கும் காக்கா முட்டை மணிகண்டன்!

webteam

விவசாயிகள் பிரச்னையை மையமாகக் கொண்டு ’கடைசி விவசாயி’ படத்தை இயக்கி வருகிறார் ’காக்கா முட்டை’ மணிகண்டன். குற்றமே தண்டனை படத்திற்கு பிறகு இந்தப்படத்தை இயக்குவதாக கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பே அவர் அறிவித்து இருந்தார். ஏன் இவ்வளவு தாமதம்?
‘ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து வருகிறது. இந்தப்படத்திற்காக தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று ஆயிரக்கணக்கான விவசாயிகளை சந்தித்து வருகிறேன். அவர்களது அனுபவங்களைத் தொகுத்து வருகிறேன். விவசாயிகளின் நிஜ வாழ்க்கையை படமாக்க இருப்பதால் நிதானமாக பட வேலைகளை செய்து வருகிறோம். எனது முந்தைய படங்களைவிட இந்தப்படத்தில் என்னை நிரூபிக்க வேண்டியிருக்கிறது’ என்கிறார் மணிகண்டன். இந்தப்படத்தில் நம்மாழ்வாரின் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட இருக்கிறதாம்.