சினிமா

‘இந்தியன்2’ படத்திற்காக மேக் அப் டெஸ்ட் எடுத்த காஜல் அகர்வால்

‘இந்தியன்2’ படத்திற்காக மேக் அப் டெஸ்ட் எடுத்த காஜல் அகர்வால்

webteam

கமல்ஹாசனின் ‘இந்தியன்2’ படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

தமிழில் அதிகம் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால். விஜய் போன்ற இளம் நடிகர்களுடன் இவர் நடித்து வருகிறார். அதே அளவுக்கு இவர் தெலுங்கு திரை உலகிலும் முதன்மையான நடிகையாக வலம் வருகிறார்.

துறுதுறு என அவர் திரையில் தனது நடிப்பை வெளிப்படுத்துவதால் இருமாநில ரசிகர்களும் அவரை அதிகம் விரும்புகின்றனர். 

இந்நிலையில் தெலுங்கில் அவர் நடித்துள்ள ‘கவசம்’ படத்தின் இசை வெளிட்டு விழா நடந்தது. அதில் காஜல், தனது இணை நடிகர் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ் உடன் பங்கேற்றார். அப்போது அவர், இந்தக் கதையை கேட்டவுடன் அதில் விழுந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும் இந்தக் குழுவுடன் இணைந்து பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியளித்ததாக தெரிவித்தார். 

சாய் உடன் சேர்ந்து மேலும் ஒரு படத்தில் நடித்து வருவதாக குறிப்பிட்டார். அதனிடையே நான் ஏற்கெனவே நடிகர் கமல்ஹாசனுடன் ஒரு படம் நடிக்க இருக்கிறேன் என்றும் கூறினார். ஆனால் கமல் குறித்து குறிப்பிடும் படம் பற்றி இதுவரை தமிழில் ஏதும் அதிகாரப்பூர்வமான அறிவுப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆகவே அது எந்தப் படம் என்பது குறித்து பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. 

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்துள்ளதாகவும் அங்கே நடந்த ‘இந்தியன்2’ நடிகை தேர்வில் அவர் கலந்து கொண்டதாகவும் அதற்கான மேக் அப் டெஸ்ட் கூட எடுக்கப்பட்டுவிட்டதாகவும் சினிமா வட்டாரங்களில் செய்தி அடிப்பட்டு வருகிறது. இயக்குநர் ஷங்கரின் நெருங்கிய வட்டம் அதனை உறுதியும் செய்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

பலரும் எதிர்ப்பாக்கும் கமல்ஹாசனின் ‘இந்தியன்2’ படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்திற்கான செட் வேலைகள் தொடங்குவதற்கான பூஜை போடப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார். அதனை அடுத்து செட் அமைக்கும் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

கமல்ஹாசனின் தோற்றத்திற்கான புகைப்படம் எடுக்கும் பணிகள் சில தினங்கள் முன்பாக முடிந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. அநேகமாக படக்குழு டிசம்பர் 14ஆம் தேதி தனது முதல் படப்பிடிப்பை தொடங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.