சினிமா

தமன்னாவை ஓரம் கட்டிய காஜல் அகர்வால்!

தமன்னாவை ஓரம் கட்டிய காஜல் அகர்வால்!

webteam

காஜல் அகர்வாலுக்கு வாய்ப்புகள் வண்டி வண்டியாய் வட்டமடிக்கின்றன.  தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் சுற்றிச் சுழன்று நடித்து வரும் அவர் தமிழில் ஒரே நேரத்தில் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் அஜித்தின் விவேகம் படத்திலும், விஜயுடன் மெர்சல் படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில் ராணாவுடன் நேனே ராஜா, நேனே மந்திரி, கல்யான் ராமுடன் ஒருபடம் என பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் ஹிந்தியில் கங்கனா ரணாவத் நடித்த குயின் தமிழில் ரீமேக் ஆக இருக்கிறது. இந்தப்படத்தை தமிழ், தெலுங்கில் ரமேஷ் அரவிந்த் இயக்க உள்ளார். இந்தப்படத்தில் நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அவர் அதிக சம்பளம் கேட்டதால், தற்போது அந்தப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம் காஜல்.