தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் ஏகப்பட்ட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கும் காஜல் அகர்வால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.
தமிழில் ஒரே நேரத்தில் அஜீத்துடன் விவேகம் படத்திலும், விஜயுடன் மெர்சல் படத்திலும் நடித்துள்ளார் காஜல் அகர்வால்.
விவேகம் நாளை வெளியாக இருக்கிறது மெர்சல் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாக இருக்கிறது. அடுத்தடுத்து வெளியாகும் பெரிய படங்களான இரண்டுமே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஒரு படத்திற்கு ரூ. 1.5 கோடி சம்பளமாக பெற்றுவந்த காஜல் தனது சம்பளத்தை 2 கோடி ரூபாயாக உயர்த்தி இருக்கிறார். அவரது மேனேஜர் ரோனி போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் சிக்கியதால் அவரை நீக்கி விட்டு பல நட்சத்திரங்களுக்கு மேனேஜராக பணியாற்றி வரும் கிரிதரை மேனேஜராக நியமித்து இருக்கிறார் காஜல். தெலுங்கில் ஸ்ருதிஹாசன், ரகுல் பிரீத்திசிங் ஆகியோர் காஜலுக்கு கடும்போட்டியாக இருந்துவருவதால் கிரிதரை மேனேஜராக நியமித்து இருப்பதாக தெலுங்கு திரையுலகினர் கருதுகின்றனர்.