மணிரத்னம் இயக்கத்தில் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் தயாராகும் ‘’காற்று வெளியிடை’’ திரைப்படத்தின் இசை இன்று வெளியானது. சென்னையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் நடிகர் சூரியாவும் பாடல்களை கொண்ட சி.டி-யை வெளியிட்டனர்.
மணிரத்னம் – வைரமுத்து – ஏ.ஆர்.ரகுமான் என்ற அசத்தலான கூட்டணியின் பாடல்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பை எற்படுத்தியிருந்தது. எற்கனவே ‘அழகியே’, ‘வான்...வருவான்’ மற்றும் ‘சாரட்டு வண்டியில’ என்ற மூன்று பாடல்களின் சிறிய வெர்சன் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இந்த பாடல்களின் முழு வெர்சனும், மேலும் ‘நல்லாய் அல்லாய்’, ‘டேங்கோ கேளாயோ’, ‘ஜூகுனி’ என்ற பாடல்களும் இன்று வெளியாகியுள்ளன என படக்குழு அறிவித்துள்ளது. இதில் ஜூகுனி பாடல் ட்ரெய்லரில் பின்னணி இசையாக வந்தது.
கார்த்தி, அதிதி ராவ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படம் வருகின்ற ஏப்ரல் 7, 2017 அன்று திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு சென்சார் போர்டு ‘U’ சான்றிதழ் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.