சினிமா

தொடர் கொண்டாட்டங்களில் படக்குழு... காத்துவாக்குல தியேட்டர் விசிட்டும் நயன்தாரா! #KRK

தொடர் கொண்டாட்டங்களில் படக்குழு... காத்துவாக்குல தியேட்டர் விசிட்டும் நயன்தாரா! #KRK

நிவேதா ஜெகராஜா

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியை கொண்டாட தியேட்டர்களுக்கு சென்று விசிட் அடித்து வருகின்றனர் நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் விக்னேஷ் சிவன்.

’நானும் ரெளடிதான்’ வெற்றிக்குப்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, அனிருத் ஆகியோரது கூட்டது மீண்டும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் இணைந்தனர். இப்படத்தில் கண்மணி கதாபாத்திரத்தில் நயன்தாராவும், மற்றொரு நாயகியாக கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்தனர். இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய்சேதுபதி நடித்திருக்கிறார்.

அனிருத் இசையில் கடந்த வெள்ளிக்கிழமை தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகியிருந்தது. நகைச்சுவை மற்றும் ரொமன்ஸ் உடன் இப்படத்திற்கான தமிழ்நாட்டு தியேட்டர் ரீலிஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனத்துடன் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பகிர்ந்துகொண்டுள்ளது.

கலவையான விமர்சனங்களை படம் பெற்றுவரும் நிலையில், படத்திற்கான ப்ரமோஷனுக்காக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தியேட்டர்களுக்கு திடீர் விசிட் அடித்து வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்களை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தனது சமூகவலைதளங்களில் வெளியிட்டுவருகிறது.

நேற்று இரவு அப்படியான ஒரு தியேட்டர் விசிட்டின்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோருடன் விஜய் சேதுபதியும் இனைந்திருக்கிறார். மூவரும் தியேட்டரில் ரசிகர்களை பார்த்துள்ளனர். மேலும் படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் மூவரும்.