சினிமா

பிப்ரவரி 14ல் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’அப்டேட்: இயக்குநர் தகவல்!

பிப்ரவரி 14ல் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’அப்டேட்: இயக்குநர் தகவல்!

webteam

பிப்ரவரி 14-ம் தேதி ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’திரைப்படத்தின் அப்டேட் வரவுள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்

கடந்த 2015-ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நானும் ரௌடிதான்’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் விக்னேஷ் சிவன், நடிகர் விஜய்சேதுபதியை வைத்து புதிய படத்தை இயக்கி, தயாரிக்கிறார். ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று வெளியிடப்படும் என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். படத்தின் முதல்பாதி படப்பிடிப்பு ஏற்கெனவே நிறைவடைந்துள்ள நிலையில் இரண்டாம் பாதியும் நிறைவடையும் நிலையில் இருப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவனின் ட்வீட்டை அடுத்து வரப்போகும் அப்டேட்டை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக இது இருக்கலாம் எனவும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.