பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம், ‘காலா’. ஹூமா குரேஸி, அஞ்சலி படேல், சமுத்திரக்கனி, நானா படேகர், அருள்தாஸ், ஈஸ்வரி ராவ் உட்பட பலர் நடிக்கின்றனர். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னை அருகே நடந்துவருகிறது.
படப்பிடிப்பில் இருந்து மும்பை திரும்பியுள்ள அஞ்சலி படேல் கூறும்போது, ’இந்தப் படத்தில் கடந்த சில மாதங்களாக நடித்துவருகிறேன். மும்பையில் நடந்த படப்பிடிப்புக்குப் பிறகு சென்னையில் நடித்துவருகிறேன். தாராவி போன்று சென்னையில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்த தமிழர்களின் கதைதான் படம். ’காலா’வாக ரஜினி நடிக்கிறார். நான் தாராவியில் வசிக்கும் மராட்டிய பெண்ணாக நடிக்கிறேன். ரஜினியும் படத்தில் சில மராட்டி வசனங்களை பேசுகிறார்’ என்றார்