சினிமா

கமல் அலுவலகத்தில் இயக்குனர் கே.பாலசந்தர் சிலை திறப்பு!

கமல் அலுவலகத்தில் இயக்குனர் கே.பாலசந்தர் சிலை திறப்பு!

webteam

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் அலுவலகத்தில் இயக்குனர் கே.பாலசந்தரின் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்த நாளை முன்னிட்டு, சகோதரர் சாருஹாசனுடன் சேர்ந்து தந்தை சீனிவாசனின் சிலையை, பரமகுடியில் நேற்று திறந்து வைத்தார். இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது ராஜ்கமல் அலுவலகத்தில் நிறுவப்பட்ட இயக்குனர் கே.பாலசந்தரின் மார்பளவு சிலையை இன்று திறந்து வைத்தார்.

இந்த சிலை திறப்பு விழாவில், கமல்ஹாசனுடன் நடிகர் ரஜினிகாந்தும் கலந்துகொண்டு சிலையை திறந்து வைத்தார். கே.பாலசந்தரின் மகள் புஷபா கந்தசாமி, இயக்குனர் மணிரத்னம், கவிஞர் வைரமுத்து, நடிகர் ரமேஷ் அரவிந்த், நாசர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.