சினிமா

‘ரஜினி செல்வி’யாக மாறப்போகும் ஜோதிகா?

‘ரஜினி செல்வி’யாக மாறப்போகும் ஜோதிகா?

webteam

நடிகை ஜோதிகா மலையாள படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

மணிரத்னம் இயக்கி வரும் ‘செக்கச்சிவந்த வானம்’படத்தில் நடிகை ஜோதிகா நடித்து வருகிறார். அதனை அடுத்து அவர் ராதாமோகன் இயக்க உள்ள ‘காற்றின் மொழி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கு பிறகு அவர் மலையாள படம் ஒன்றின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.  சாஜித் யாஹியா இயக்கத்தில் உருவான ‘மோகன்லால்’ படத்தில் ஜோதிகா, ரஜினியின் ரசிகையாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரது கதாப்பாத்திரத்திற்கு ‘ரஜினி செல்வி’ என பெயரிட்டப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதற்கான அறிவிப்பு வரலாம் என செய்தி வெளியாகி வருகிறது. 

இது தொடர்பான செய்தி குறித்து ஜோதிகா தரப்பு எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. ஆனால் மலையாள இயக்குநர் சாஜித், “ஜோதிகாவை ‘மோகன்லால்’ படத்தை காண வருமாறு மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளோம். அவர் அந்தப் படத்தின் ரீமேக்கில் நடிப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மஞ்சு வாரியர் நடித்த படத்தின் ரீமேக்கான ‘36 வயதினிலே’ படத்தில் ஜோதிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.