சினிமா

வித்யா பாலன் கதாபாத்திரத்தில் ஜோதிகா?

வித்யா பாலன் கதாபாத்திரத்தில் ஜோதிகா?

webteam

ஹிந்தியில் வித்யா பாலன் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

ஹிந்தியில் மிகப் பிரபலமான நடிகை வித்யா பாலன். இவர் நடிப்பில் ‘தும்ஹரி சுலு’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் கதை ‘காமெடி- டிராமா’ பாணியில் அமைக்கப்பட்டிருந்தது. இதனை சுரேஷ் திரிவேனி இயக்கி இருந்தார். ஒரு குடும்ப பெண்மணி  எப்படி ரேடியோ ஜாக்கியாக மாறி கலக்குகிறார் என்ற போக்கில் அந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது.

இந்நிலையில்‘தும்ஹரி சுலு’ தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக தெரிகிறது. அதற்கான வேலைகள் நடைப்பெற்று வருகின்றன. ஹிந்தியில் வித்யா பாலன் செய்த அந்தக் கதாபாத்திரத்தை தமிழில் ஜோதிகா ஏற்க இருப்பதாக கூறப்படுகிறது. ‘நாச்சியார்’ வெற்றிக்குப் பிறகு ஜோ தற்போது மணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து அதனை ஹிந்தி ரீமேக்கில் அவர் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.